கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இல்லையா?

கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இல்லையா என்பது 3 மாதங்களில் தெரிந்துவிடும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது.  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தப் பரிசோதனை தொடங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா, கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை சோதிக்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பரிசோதனைக்காக ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டதாக குறிப்பிட்டார். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் பாதுகாப்பானதா என்பது குறித்து இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.