செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கான மென்பொருள் அறிமுகம்...!

செவித்திறன் சவாலுடைய குழந்தைகளுக்கான மென்பொருள் அறிமுகம்...!

புதுச்சோியில் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான மென்பொருளை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் இணைந்து உருவாக்கி சாதனை படைத்துள்ளனா். 

பிறவியிலிருந்து கேட்கும் திறன் சவாலுடைய குழந்தைகள் பயன்படுத்தும் கோஹிலா என்ற மென்பொருளை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக வடிவமைத்துள்ளன. 

இதையும் படிக்க : ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டத்தில்...ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது...!

தற்போது, இந்த  மென்பொருளின் அறிமுக விழா தொழில்நுட்ப பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த மென்பொருளின் உபயோகம் குறித்து விளக்கமளித்த ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால், ஜிப்மர் ENT துறையால் தயாரிக்கப்பட்ட இந்த  மென்பொருளை செல்போன், டேப் மூலம் பயன்படுத்தி சிறுவர்களின் பெற்றோர் வீட்டிலிருந்தே ஒலி மற்றும் சொல்லாற்றலை மேம்படுத்தும் பயிற்சியை கொடுக்க முடியும் என்று அறிமுகப்படுத்தி அதன் விளக்க நூல்களை வெளியிட்டார்.

இதனையடுத்து, நிகழ்ச்சியில் மென்பொருளை சிறப்பாக வடிவமைக்க பணியாற்றிய ராஜேஷ்குமார் மற்றும் அகஸ்டினா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜிப்மர் இஎன்டி துறை பேராசிரியர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.