ஆறரை ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த இந்திராணி முகர்ஜீ.. ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!

ஆறரை ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த இந்திராணி முகர்ஜீ.. ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!

மகள் கொலை வழக்கில் கைதாகி ஆறரை ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த இந்திராணி முகர்ஜீக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு திருப்பங்கள் நிறைந்த மர்மமான இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு தொலைக்காட்சி நிர்வாகிகளான இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் கணவர் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜியுடன் ஷீனா போரா நெருக்கமாக இருந்ததாலே அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான  இந்திராணி முகர்ஜிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பலமுறை ஜாமின் மறுத்து வந்தது.

இந்தநிலையில் அதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திராணி பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து விட்டதாக கூறி அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.