இந்தியாவின் மே மாத சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.04% ஆக சரிவு!!

இந்தியாவின் சில்லறை வர்த்தக பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 7 புள்ளி 04 சதவீதமாக சரிந்துள்ளது.

இந்தியாவின் மே மாத சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.04% ஆக சரிவு!!

நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டே நிதி கொள்கை சார்ந்த முடிவுகளை இந்திய ரிசர்வ வங்கி மேற்கொள்கிறது.

இந்தியாவின் அதிகபட்ச சில்லறை வர்த்தக பணவீக்க வரம்பு, 2 முதல் 6 சதவீதம் வரையில் இருக்கலாம் என் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால் கடந்த 5 மாதங்களாக இந்தியாவின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 7 புள்ளி 79 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 7 புள்ளி 04 சதவீதமாக சரிந்துள்ளது. இது சாதகமான அம்சமாகவே பார்க்கப்பட்டாலும், ரிசர்வ வங்கியின் வரம்பை காட்டிலும் அதிகமாக உள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை அதிகரித்ததே சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.