"9 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி" - மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.

"9 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி" - மத்திய  இணை அமைச்சர் எல். முருகன்.

கடந்த 9 ஆண்டுகளில்  இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய  இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் 7வது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பேசினார். இதில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எம் முருகன் 109 பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எம் முருகன் பேசும்போது:...

”பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் மிக உயரிய நோக்கும் அவர்களுடைய முயற்சி இந்த நாட்டில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது புதுப்புது கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் மக்களை சார்ந்து கொண்டு வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக நமது நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சியானது முன்னேறிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு முடிந்து 76 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கின்றோம் நம்முடைய இலக்கு அடுத்த 25 ஆண்டுகள் 100வது சுதந்திர தினத்தில் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக அனைத்து மக்களுக்கும் கிடைக்கின்ற நாடாக இருக்க வேண்டும் என்பது 25 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக மேக்கப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2014 ம் ஆண்டுக்கு முன்பாக 500 கம்பெனிகள் தான் இருந்தது. இந்த 9 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கம்பெனிகள் வளர்ந்துள்ளது. உலகத்தில் மிகப்பெரிய 3வது இடத்தில் இருக்கிறது.
இதற்குக் காரணம் பாரத பிரதமர் மோடிஜி தான்.

உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. இங்கிலாந்து பின்தள்ளிவிட்டு மிகப்பெரிய வேகமாக வளர்ந்த வருகின்ற 5வது நாடாக நம்முடைய பாரத நாடு இருக்கிறது இது 9 ஆண்டுகளில் வந்திருக்கிறது. 

ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் மிக வேகமாக இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 2022 ஆம் தேதி முதல் வேலை வாய்ப்பு முகமை பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தேசத்தை வழி நடத்துகின்ற நாடாக நாம் இருக்கின்றோம்.

கர்மயோகி பிரபா மூலமாக கிட்டத்தட்ட 400 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நல்ல சிறந்த ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் டிஜிட்டல் பேமெண்ட், தேவையற்ற சட்டங்கள் இருந்தது அந்த சட்டங்களை எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, வேகத்திற்கு தடையாக இருக்கக் கூடாது. அந்த தடை கற்களை அகற்றிவிட்டு ஒரு நல்ல ஆட்சி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி கொடுத்துக் கொண்டிருக்கிறார்..  சேவை, நல்ல அரசாங்கத்தை கொடுக்க வேண்டும், ஏழை எளிய மக்களின் நலனுக்கான மேம்பாடு இந்த மூன்று தாரக மந்திரத்தை நரேந்திர மோடி ஜி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. சிறு வியாபாரிகளுக்கு சுழல் நீதி என்று சொல்லக்கூடிய பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 140 கோடி மக்கள் வாழும்  இந்த நாட்டில் அரசாங்கத்தின் சேவையை, ஏழை எளிய மக்களின் நலன், நல்ல ஆட்சி மூலமாக மக்களை மேம்படுத்துவதற்கு முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு சிறந்த அதிகாரிகளாக நாம் வரவேண்டும் என்பதற்காக தான் நம்முடைய கருமயோகி பல பயிற்சிகளும் பல திட்டங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் வழிகாட்டியாக ஜி-20 மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை முடித்துக் கொண்டு உள்ளோம். நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி அடிப்படை கட்டமைப்பு மிக முக்கியமானது. நம்முடைய இலக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் இணைந்து உழைப்போம் என கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதிய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எம் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது ...

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் இதுவரை 6 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் சேர்த்து ஆறரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற தேசத்திற்கு சொல்லியிருந்தார். அதன்படி 6 லட்சம் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்தியா முழுவதும் மத்திய அரசாங்கத்தின் பணிகள் ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் ரோஸ்கார் மேல முகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வரும் காலத்தில் 10 லட்சம் பேருக்கு கொடுக்கப்படும் சொன்னதை சொன்னபடி செய்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள். மத்திய அரசாங்கத்தின் உடைய பணிகள் இங்கு பணி ஆணை வாங்கியவர்கள் 95% பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பணி ஆணை வாங்கி இருக்கிறார்கள்” என்றார்.

இதையும் படிக்க    | ”வங்கிகளிடம் இப்போ உள்ள வலிமை...9 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை” பிரதமர் மோடி பேச்சு!