தரக்குறைவாக நடத்தப்பட்ட இந்தியா கிரிக்கெட் வீரர்....!!!! மன்னிப்பு கேட்க தயங்கும் நிர்வாகம்!!!!

தரக்குறைவாக நடத்தப்பட்ட இந்தியா கிரிக்கெட் வீரர்....!!!! மன்னிப்பு கேட்க தயங்கும் நிர்வாகம்!!!!

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை "முரட்டுத்தனமான" நடத்தைக்காகவும், "மோசமான அனுபவத்திற்காகவும்" விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மும்பையிலிருந்து துபாய்க்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் மூலம் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். பதான் தனது அனுபவத்தை விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவுண்டரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைக்கப்பட்டதாகவும், "ஊழியர்கள் முரட்டுத்தனமாக" நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

"இன்று, நான் மும்பையிலிருந்து துபாய்க்கு விஸ்தாரா ஃப்ளைட் யுகே-201 மூலம் பயணம் செய்து கொண்டிருந்தேன். செக்-இன் கவுண்டரில், எனக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டது, உறுதிசெய்யப்பட்ட முன்பதிவாக இருந்த எனது டிக்கெட் வகுப்பை விஸ்தரா விருப்பமின்றி தரமிறக்கினர். ஒரு முடிவிற்காக கவுண்டரில் அரை மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டேன்.  என்னுடன், என் மனைவி, எனது 8 மாத குழந்தை மற்றும் 5 வயது குழந்தையும் இதை கடந்து செல்ல வேண்டியிருந்தது.”

ஊழியர்கள் முரட்டுத்தனமாக வகையில் பல்வேறு காரணங்களை கூறினர் எனவும் மேலும் இரண்டு பயணிகளும் இதே அனுபவத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது எனவும் கூறியுள்ளார்.  நிர்வாகத்தால் இது எப்படி நடத்தப்பட்டது என்பதை தான் கேட்டுக் கொள்வதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்மூலம் தான் அனுபவித்த அதே அனுபவத்தை இனி யாரும் அனுபவிக்கக்கூடாது என்றும் கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பல ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பதானின் சக ஊழியருமான ஆகாஷ் சோப்ரா இதற்கு பதிலளித்து, விமான நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற நடத்தை எதிர்பார்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

2000களில் இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக இருந்த பதான், 2007ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதையும் படிக்க: ஒரே நாடு!!ஒரே பிராண்ட்!!