பேஸ்புக், நெட்ஃபிக்ஸ் மீதான சந்தை சமநிலை வரியை திரும்ப பெற்றது இந்தியா....

உலகளாவிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பேஸ்புக், நெட்ஃபிக்ஸ் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் சந்தை சமநிலை வரியை இந்தியா திரும்ப பெற உள்ளது.

பேஸ்புக், நெட்ஃபிக்ஸ் மீதான சந்தை சமநிலை வரியை திரும்ப பெற்றது இந்தியா....

கூகுள், பேஸ்புக், நெட்ஃபிக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 15 வரி விதிக்கும் உலகளாவிய வரி ஒப்பந்தத்திற்கு 136 நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த ஜுன் மாதம் ஒப்புதல் தெரிவித்திருந்தனர். கடந்த ஜுன் மாதம் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா 4 ஆயிரம் கோடி வரி வருவாயை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்புடனான உலகளாவிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்படும் சந்தை சமநிலை வரியை திரும்ப பெற இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நடைமுறை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 2 முதல் 6 சதவீதத்தை சந்தை சமநிலை வரியாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.