இந்தியா கூட்டணி; இன்று மும்பையில் கூட்டம்!

இந்தியா கூட்டணி; இன்று மும்பையில் கூட்டம்!

எதிா்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில்  இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சாா்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த சூழலில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் 26 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே இன்று மாலை 6. 30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கும் எனவும், நாளை காலை 10.30 மணிக்கு INDIA கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மதியம் 3.30 மணிக்கு கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி இருக்கும்..? படம்பிடித்துக் காட்டியது ’ பிரக்யான்’ ...!