அசாமில் அதிகரித்த டெங்கு பரவல்.. கல்வி நிலையங்களுக்கு தொடர் விடுமுறை...

டெங்கு பரவலால் அசாம், திபு நகரில் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசாமில் அதிகரித்த டெங்கு பரவல்.. கல்வி நிலையங்களுக்கு தொடர் விடுமுறை...

அசாமில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சலால், 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

20-க்கும் கூடுதலானோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக திபு நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | உருமாறும் ஒமிக்ரான்.. மீண்டும் ஒரு கொரோனா அலை.. எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு..!

முன்னிட்டு கர்பி அங்லோங் தன்னாட்சி கவுன்சில் சார்பில் விடப்பட்ட உத்தரவில், தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால், தடுப்பு நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையிலுள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

மேலும் படிக்க | குரங்கை மனிதன் என அழைக்கலாமா? ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து ரா. சரத்குமார்...

இதன்படி இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை இந்த விடுமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரம் பேரை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

மொத்தம் 1,422 வீடுகளில் நடந்த சோதனையில் 74 காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | சென்னை : கல்விச் சுற்றுலாவை என்ஜாய் செய்து வரும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்...!