போலி செய்தி பரவிய விவகாரத்தில்... டுவிட்டர் இயக்குனர் இன்று ஆஜர்

டுவிட்டரில் போலி செய்தி பரவிய விவகாரத்தில், டுவிட்டரின் இந்திய நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி இன்று உத்திர பிரதேச போலீசார் முன் நேரில் ஆஜராக உள்ளார்.

போலி செய்தி பரவிய விவகாரத்தில்...  டுவிட்டர் இயக்குனர் இன்று ஆஜர்

 உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலான வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டது.

இந்த வீடியோவை நீக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத டிவிட்டர் நிறுவனம் மீது, உத்திர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக டுவிட்டரின் இந்திய நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரிக்கு உத்திர பிரதேச போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இன்று அவர் நேரில் ஆஜராக உள்ளார்.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு இணங்க மறுத்ததை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சட்ட பாதுகாப்பை இழந்துள்ளது.

இதனால் டுவிட்டரில் பதிவிடப்படும் போலி செய்திகள்,வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும்  இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகளுக்கு அந்நிறுவனமே நேரடியாக பொறுப்பாகியுள்ளது.