நீர் வழித்தடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்...! மாநகராட்சி சார்பில் இடிக்கும் பணி தீவிரம்...!

இரண்டாவது நாளாக நீர் வழித்தடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பெங்களூரு மாநகராட்சி சார்பில் இடிக்கும் பணி தீவிரம்...

நீர் வழித்தடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்...! மாநகராட்சி சார்பில் இடிக்கும் பணி தீவிரம்...!

பெங்களூர் நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதை அடுத்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யபட்டு, மழை நீர் செல்லும் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. 

மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரத்தஹள்ளி பகுதியில் உள்ள முனேகொள்ளாள், பசவ நகர், சலகட்டா ஆகிய லேஅவுட் பகுதிகளில் மழைநீர் வழித்தடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பிறகு கர்நாடகா அரசு உரிய நிதியை ஒதுக்கி இந்த இடங்களில் கால்வாய்களை அமைத்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.