”நான் நீதிமன்றங்களை நம்பினேன்...ஆனால் ஏமாற்றப்பட்டேன்...”-பில்கிஸ் பானோ!! ஏன் அவ்வாறு கூறியுள்ளார்?

”நான் நீதிமன்றங்களை நம்பினேன்...ஆனால் ஏமாற்றப்பட்டேன்...”-பில்கிஸ் பானோ!! ஏன் அவ்வாறு கூறியுள்ளார்?

குஜராத் கலவரம்:

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதால் குஜராத்தில் கலவரம் வெடித்தது.  இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதிலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு இடங்களுக்கு தப்பித்து சென்றனர்.

பில்கிஸ் பானோ:

தப்பித்து சென்ற குடும்பங்களில் பில்கிஸ் பானோவின் குடும்பமும் ஒன்று.  தப்பி செல்லும் போது ஒரு கலவர கும்பல் அவர்களை தாக்க தொடங்கியது.  இந்த தாக்குதலில் பில்கிஸ் பானோவின் 3 வயது மகள் உட்பட் 7 பேர் கொல்லப்பட்டனர்.  அப்போது பானோ 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  பில்கிஸ்  பானோ கலகக்காரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ-டம் வழக்கு வழங்கப்பட்டது.  அவர்கள் விசாரணையின் முடிவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்ப்ட்ட குற்றவாளிகள் 11 பேருக்கும் 2008ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  2017ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

மேலும் படிக்க: விடுதலை நாளில் பறிபோன சுதந்திரம்!!!

பில்கிஸ் பானோ மனக்குமறல்:

குற்றவாளிகள் விடுதலையை தொடர்ந்து பில்கிஸ் பானோ அவரது மனக்கவலைகளை முன்வைத்துள்ளார்.  இந்திய சுதந்திரமடைந்த நாளன்று அவருடைய பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட11 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளது மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.  ”எனது குடும்பத்தையும் என்னுடைய மூன்று வயது மகளையும் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலையாகிவிட்டனர் என கேள்விப்பட்டபோது நான் வார்த்தைகளற்றும் உணர்வற்றும் இருந்தேன்” என கூறியுள்ளார்.

மேலும் “எந்த ஒரு பெண்ணுக்கான நீதியும் இவ்வாறு தான் முடிவடையுமா?  நான் நாட்டின் நீதிமன்றங்களை நம்பினேன்.  இந்த குற்றவாளிகளின் விடுதலை எனது அமைதியை பறித்து விட்டது.  நீதியின் மீதான எனது நம்பிக்கையை போக்கிவிட்டது.  எனது துயரம் நீதிமன்றங்களில் நீதிக்காக போராடும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது” என பேசியுள்ளார்.

இதனுடன் “இவ்வளவு பெரிய முடிவு எடுப்பதற்கு முன்பு மாநில அரசு என் நலன் என் பாதுகாப்பு குறித்து நினைக்கவிலை.  இதைக் குறித்து என்னுடன் விவாதிக்கவில்லை.  குஜராத் அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.  தயவு செய்து இந்த விடுதலை முடிவை ரத்து செய்யுங்கள்.  நானும் எனது குடும்பமும் அமைதியாக வாழ்வதறகான வழியை ஏற்படுத்துங்கள்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜகவும் ஆம் ஆத்மியும் தொடர்ந்து இந்த விடுதலையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.  

இதையும் படிக்க: ”பேச்சில் மட்டுமே பெண்களுக்கு மரியாதை...ஆனால் செயல்பாடோ...”பிரதமரை விமர்சித்த ராகுல்!