தனது ஊதியத்தில் 55% வருமான வரியாக செலுத்துகிறேன்: குடியரசு தலைவர் சர்ச்சை பேச்சு!  

தனது வருமானத்தில் 55 சதவீதத்தை வருமான வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது ஊதியத்தில் 55% வருமான வரியாக செலுத்துகிறேன்:  குடியரசு தலைவர் சர்ச்சை பேச்சு!   

தனது வருமானத்தில் 55 சதவீதத்தை வருமான வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ள நிலையில், தனது சொந்த கிராமமான ஜின்ஜாக் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தான் மாதம் 5 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கினாலும், அவற்றில் 2 லட்சத்து 75 ஆயிரத்தை வரிப்பணமாக செலுத்தி வருவதாக கூறினார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வரிசெலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே குடியரசுத் தலைவரின் இந்தப் பேச்சு சர்ச்சைகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவர் வருமான வரி செலுத்தும் வரம்புக்கு உட்பட்டவரா எனக் கேள்விகள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று குடியரசுத் தலைவரும் வருமான வரி செலுத்தும் வரம்புக்கு உட்பட்டவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. தனது ஊதியம் முழுவதையும் அப்படியே, மத்திய அரசின் நிவாரண நிதிக்கு வழங்க முன் வருபவர்களுக்கு மட்டுமே வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வருமான வரிச் சட்டம் வகை செய்கிறது.

எனினும் இந்திய வருமானவரிச் சட்டப்படி 5 லட்ச ரூபாய் ஊதியம் பெறும் குடியரசுத் தலைவர் தனது வருமானத்தில் 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஆனால் குடியரசுத் தலைவர் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்துவதாகக் கூறுவது நடைமுறையில் உள்ள வருமான வரி வசூலிப்பிற்கு முரணாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.