மருத்துவராக பணிபுரிந்த போதே அரசியலுக்கு வந்தேன்...தமிழிசை பெருமிதம்!

மருத்துவராக பணிபுரிந்த போதே அரசியலுக்கு வந்தேன்...தமிழிசை பெருமிதம்!

வேலை இல்லாதவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறப்படும் நிலையில் மருத்துவராக பணியாற்றிய போதே அரசியலுக்கு வந்ததாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை சார்பில் தேசிய குழந்தைகள் மருத்துவ எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் 18வது ஆண்டு  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதையும் படிக்க : பருவமழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பத அளவை... ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்...!

அப்போது, தான் ஒரு மகப்பேறு மருத்துவராக இருந்ததால் குழந்தைகள் மருத்துவத்திலும் நல்ல அனுபவம் கிடைத்ததாக கூறினார். மேலும் வேலை இல்லாதவர்கள்  அரசியலுக்கு வருவார்கள் என கூறுவார்கள்,ஆனால் மருத்துவராக இருந்த போது அதிக வேலை பளு இருந்தாலும், அரசியலில் வர வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்பதால் அரசியலுக்கு வந்து தற்போது ஆளுநராக உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.