நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு...

நாட்டில் தற்போது இந்து மற்றும் இந்துத்துவ வாதிக்களுக்கு இடையேயான போட்டி அரசியலே நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு...

5 மாநில தேர்தலை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் தற்போது, இந்து - இந்துத்துவ வாதிகளுக்கு இடையேயான போட்டி அரசியலே நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்து மற்றும் இந்துத்துவவாதி, இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளதாக கூறிய அவர், தாம் இந்து ஆனால் இந்துத்துவ வாதி அல்ல என கூறினார். மேலும், மகாத்மா காந்தி ஒரு இந்து ஆனால் கோட்சே ஹிந்துத்துவ வாதி என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் இந்துத்துவ வாதிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தங்கள் வாழ்நாளை செலவழிப்பதாக விமர்சித்த அவர், அதிகாரத்திற்காக அவர்கள் எதையும் செய்ய துணிவார்கள் என கூறினார். மேலும், அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்பவில்லை என்றும்,  அதில் நேர்மை உண்மை என்பதை அவர்கள் விரும்புவதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.