நீட் தேர்வு விவகாரம்  : தமிழக எம்.பி.-களை சந்திக்க நேரம் ஒதுக்கிய உள்துறை அமைச்சர்!!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் வரும் 17 ஆம் தேதி சந்திக்க உள்ளனர்.

நீட் தேர்வு விவகாரம்  : தமிழக எம்.பி.-களை சந்திக்க நேரம் ஒதுக்கிய உள்துறை அமைச்சர்!!

மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி. க்கள் குடியரசுத் தலைவரிடம் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக எடுத்துரைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பிகளை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கடந்த 8 ஆம் தேதி முதல்வர் தலைமையில் அனைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நீட் விவகாரத்தில் சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி-களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து வரும் 17 ஆம் தேதி டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி-களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஐ சந்தித்து நீட் நுழைவு தேர்வு ரத்து குறித்து ஆலோசிக்க உள்ளனர்.