ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை: "செபி-க்கு 3 மாதம் அவகாசம்" !

ஹிண்டர்ன்பெர்க் அறிக்கை: "செபி-க்கு 3 மாதம் அவகாசம்" !

ஹிண்டர்ன்பெர்க் அறிக்கையை ஆய்வு செய்ய செபி-க்கு 3 மாதங்கள் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்குச்சந்தையில் மோசடி செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததாக அதானி குழுமம் மீது குற்றம்சாட்டி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை இந்திய முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிண்டர்ன்பெர்க் அறிக்கையை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைய தொடங்கின. மேலும் இதுபற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமலியில் ஈடுபட்டன. Sebi logo

மேலும் விஷாஸ் திவாரி என்பவர், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது விசாரணை கோரும் மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணையின்போது, 2016ம் ஆண்டு முதல், அதானி குழுமத்தை விசாரித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஹிண்டர்ன்பெர்க் அறிக்கையை ஆய்வுசெய்ய 6 மாதங்கள் அவகாசத்தை செபி கேட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்குள் அதனை ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!