தாய்மொழியை வளர்ப்போம்!!!! இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்த ஷா!!!!

தாய்மொழியை வளர்ப்போம்!!!! இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்த ஷா!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாணவர்கள் தங்கள் தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.   மேலும் வீட்டில் உரையாடலுக்கு தாய்மொழியைப்  பயன்படுத்துவதை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கல்வியை உள்ளூர் மொழிகளில் அரசு தற்போது ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காந்திநகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஷா இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்து தெரிவித்த அவர், சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"... நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க விரும்பினால், பிறருக்காகப் பணியாற்றுவதே உங்கள் முதன்மை பணியாக இருக்க வேண்டும்" என்று நிகழ்வின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற திரு ஷா கூறியுள்ளார்.

“இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, நீங்கள் எந்த மொழியைப் படித்தாலும், வீட்டில் உங்கள் தாய்மொழியைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் இப்போது பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் தாய்மொழியில் கல்வியை ஊக்குவித்து வருகிறோம்” எனவும் கூறியுள்ளார்.

"உங்கள் மொழியை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். வீட்டில் உங்கள் சொந்த மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்றும் பேசியுள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கை:

புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிப் பேசிய அவர், இளைஞர்களை வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில், நாட்டின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதும் பல்கலைக்கழகங்களை அமைப்பதும் அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

"எதிர்கால தேவைகளின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குவதில் தேசிய கல்வி கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. இதுவும் இங்கு நிறைவேற்றப்பம்" என்று அவர் கூறியுள்ளார்.

75 ஆண்டுகால சுதந்திரம்:

"75 ஆண்டுகால சுதந்திரப் பயணம் அழகாகவும், உற்சாகமாகவும், விளைவு சார்ந்ததாகவும் இருந்தது, ஆனால் நமது சுதந்திரப் போராட்டம் மிகவும் வேதனையானது. யாரோ ஒருவர் சுதந்திரத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளார் என்பதை ஒரு கணம் கூட மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்." என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

இதை அவர்கள் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்தால், அவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

"இன்று நீங்கள் பெற்ற பட்டம் உங்களுக்கு பயனளிக்கும். ஆனால் இதனுடன் சேர்ந்து, சமுதாய முன்னேற்றத்திற்காக நீங்கள் பங்களித்தால், இது முழு நாட்டிற்கும் பயனளிக்கும்" என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: தோல்வியுற்றதா ஆபரேஷன் லோட்டஸ்....!!!!ஆபரேஷன் சேறாக மாறிய கதை!!!!