சிலிண்டர் விலை ரூ.102.50 வரை குறைப்பு... வியாபாரிகளுக்கு புத்தாண்டு நற்செய்தி...

புத்தாண்டில் ஒரு நற்செய்தியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை ரூ.102.50 வரை குறைப்பு... வியாபாரிகளுக்கு புத்தாண்டு நற்செய்தி...

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் கச்சா விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றுக்கு 102 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலைக் குறைப்பையொட்டி இன்று முதல் டெல்லியில் வணிக சிலிண்டரின் விலை  ஆயிரத்து 998 ரூபாய் 50 காசுகளாகவும், கொல்கத்தாவில் 2 ஆயிரத்து 74 ருபாய் 5 காசுகளாகவும், மும்பையில் ஆயிரத்து 951 என்றும் சென்னையில் 2 ஆயிரத்து134 ரூபாய் 50 காசுகளாகவும் விலை குறைந்துள்ளது.

இதனால் உணவகங்கள், தேநீர் கடை உரிமையாளர்களுக்கு சற்று அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.