மக்களுக்கு ஆட்டம் காட்டும் காளை... மாட்டால் மரத்தில் குடியேறிய மக்கள்!  

காளை மாட்டுக்கு பயந்து கிராம மக்கள் மரத்தின் மீது தஞ்சம் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மக்களுக்கு ஆட்டம் காட்டும் காளை... மாட்டால் மரத்தில் குடியேறிய மக்கள்!  

காளை மாட்டுக்கு பயந்து கிராம மக்கள் மரத்தின் மீது தஞ்சம் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

குஜராத் மாநிலம் வதோதராவில்  உள்ள டப்கா கிராமத்திற்க்கு அருகில், காளை மாட்டுக்கு பயந்து கிராம மக்கள் இரவு நேரங்களில், மரத்தின் மீது தங்களுடைய கட்டில்களை போட்டு தூங்கி வருகின்றனர். 

மாஹி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள திலியா பாதா என்ற இடத்தில் தீவனம் நன்கு வளர்ந்துள்ளதால்அப்பகுதியில் காளைகள் சுற்றி திரிகின்றது. கால்நடைகளை மேய்ப்பவர்களும், அப்பகுதியில் தற்காலிக குடில்களை அமைத்திருப்பதாகவும்  கூறப்படுகிறது.இது குறித்து வனத்துறை அதிகரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

காளைகள் கடந்த 10 முதல் 15 நாட்களாக  3 முதல் 4 நபர்களை தாக்கியுள்ளதாகவும் , அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாகவும் கிராமவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.