இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை  பாத்திமா ஷேக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல்!!..

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை  பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை  பாத்திமா ஷேக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல்!!..

 இந்திய கல்வியாளர் மற்றும் பெண்ணியச் சின்னமாக திகழ்ந்தவர் பாத்திமா ஷேக். இவர் சமூக ஆர்வலராக பணியாற்றியது மட்டுமல்லாமல் சமூக சீர்த்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே ஆகியோருடன் இணைந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அறிவு கிடைக்கவும் உதவினார்.

மேலும்   சிறுபான்மை மாணவிகளுக்கென 1848ல் துவங்கப்பட்ட பள்ளியில் பணியாற்றிய முதல் இஸ்லாமிய ஆசிரியர் என்ற பெருமைக்கும் உரியவர் ஆவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்து கல்வி போதித்ததற்காக துரத்தி அடிக்கப்பட்ட ஜோதிபாய் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்து ஏராளமான பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெற உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.