அதிரடியாக குறைந்த தங்கம் விலை!  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் சரிந்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!   

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் சரிந்துள்ளது.

இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 36 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது. சென்னையில் அபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 488 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 61 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பிறகு தங்கம் விலை 36 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.