பாஜகவின் பம்பர் வெற்றியை கொண்டாடிடும் ஹோலி பண்டிகைக்கு தயாராகுங்கள் - பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில், பாஜகவின் பம்பர் வெற்றியை கொண்டாடிடும் ஹோலி பண்டிகைக்கு  மக்கள்  தாயாராகும்படி பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாஜகவின் பம்பர் வெற்றியை கொண்டாடிடும் ஹோலி பண்டிகைக்கு தயாராகுங்கள் - பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் களைக்கட்டிய நிலையில், பிரதமர் மோடி ஹர்டோல் பகுதியில் பாஜகவினருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தான் எம்.பியாக இருந்த காலக்கட்டத்தில், சமாஜ்வாடி கட்சி மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் தடுத்துவிட்டதாக குறிப்பிட்டார். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்காது என கூறிய அவர், சமாஜ்வாடிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சாதி என்ற விஷத்தை பரப்பி மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் அவர்கள், பதவிக்காக குடும்பத்துக்குள்ளேயே சண்டையிட்டு கொள்வதாகவும் கூறினார். ஆனால் தங்களது அரசு ஏழை, விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கானது என குறிப்பிட்டுள்ளார்.