வரும் 12-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்!  

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட், வருகின்ற 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் 12-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்!   

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட், வருகின்ற 12-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வாறு விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கை கோள், பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைகோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன், அடுத்த வாரம் தொடங்க உள்ளது.