10 நாட்களுக்கு முழு ஊரடங்கு... மணிப்பூர் அரசு அறிவிப்பு...

மணிப்பூரில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு... மணிப்பூர் அரசு அறிவிப்பு...

கொரோனாவின் டெல்டா மாறுபாடு பரவல் அதிகரிப்பை தொடர்ந்து மணிப்பூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அலை உச்சத்தில் இருந்த நிலையில் , வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் பாதிப்புகள் இல்லாமல் இருந்தன.

மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மணிப்பூரில் டெல்டா மாறுபாட்டின் பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர்  கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூர் அரசு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. ஜூலை 18 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு  முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.