இடஒதுக்கீட்டில் குளறுபடி: புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டம்

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

புதுச்சேரியில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22-ந் தேதி அறிவித்தது. இதில் இடஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.  இந்தநிலையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மீண்டும் குளறுபடிகள் உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளுக்கு காரணமான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக் கோரியும், புதுச்சேரி மக்களின் அடிப்படை ஜனநாயக அதிகாரத்தை நிலைநாட்டவும் நாளை மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.