பிற மாநிலங்களிலிருந்து கடன் வாங்கியாவது இலவச அரிசி வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - டி.கே.சிவக்குமார்!

பிற மாநிலங்களிலிருந்து கடன் வாங்கியாவது இலவச அரிசி வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - டி.கே.சிவக்குமார்!

இலவச அரிசி விவகாரத்தில் பாஜக வெறுப்பு அரசியல் மேற்கொண்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கும் ”அன்ன பாக்யா” திட்டத்திற்கு அரிசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்தியது. இதனை கண்டித்து துணை முதலமைச்சர் டி. கே.சிவக்குமார் தலைமையில் பெங்களூருவில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது. 

இதையும் படிக்க : நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு காட்டுவது ஏன்? கேள்வி எழுப்பிய வேல்முருகன்!

இந்நிகழ்வில் பேசிய டி. கே.சிவகுமார், மத்திய அரசிற்கு அரிசிக்கு பணம் செலுத்தியுள்ளோம். ஆனால், தற்போது அவர்கள் அரிசி தர மறுக்கின்றனர். பிற மாநிலங்களிலிருந்து வாங்கியாவது 10கி இலவச அரிசி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று கூறினார். பணத்தை வாங்கிக் கொண்டு அரிசியை தர மறுக்கும் மத்திய அரசு இரட்டைநிலை அரசியலுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, இலவச அரிசி விவகாரத்தில் பாஜக வெறுப்பு அரசியல் மேற்கொண்டு வருவதாகவும், ஏழைகளுக்கு எதிராக இந்திய உணவுதானியக் கழகம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.