மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளருக்கு சிறை...?

பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காக மேற்குவங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளருக்கு சிறை...?

யாஸ் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு, மேற்குவங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த பாண்டியோபாத்யாயும் தாமதமாக வந்ததாகக் கூறப்பட்டது.

மேலும் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பவே  மேற்குவங்க தலைமைச் செயலர் பண்டாபாத்யாயாவை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

வங்காள தலைமைச் செயலாளர், டெல்லிக்கு செல்ல உத்தரவிட்டார், செல்ல  வாய்ப்பில்லை: ஆதாரங்கள் - tamil.todayssnews.com

தலைமைச் செயலரை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் தலைமை செயலாளரை விடுவிக்க மாநில அரசு மறுத்த நிலையில், தலைமை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து மாநில தலைமை ஆலோசகராக பணியில் சேர்ந்தார் அலபன் பாண்டியோபாத்யாய். 

இதனால் கடும் ஆத்திரமடைந்த மத்திய அரசு தற்போது பாண்டியோபாத்யாய்-வுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. மோடி தலைமையிலான யாஸ் புயல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் படியான மத்திய அரசின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக பாண்டியோபாத்யாய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 51, பி பிரிவின் கீழ் இது கிரிமினல் குற்றம் என்றும் இதற்கு ஓர் ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாண்டியோபாத்யாய் 3 நாட்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.