ஆசியாவிலேயே முதல் முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திரையரங்கு திறப்பு...

ஆசியாவிலேயே முதல் முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காஷ்மீரில் தால் ஏரியில் மிதக்கும் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவிலேயே முதல் முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திரையரங்கு திறப்பு...

இயற்கை எழில் சூழ்ந்த, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சினிமா படப்பிடிப்புகளுக்கு ஏராளமான சலுகைகளை, மாநில அரசு வழங்கி வரும் நிலையில் பாதுகாப்பின் காரணமாக அந்த மாநிலத்தின் காஷ்மீர் சமவெளி பகுதியில், 24 ஆண்டுகளாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆசியாவிலேயே முதல் முறையாக தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  மிதக்கும் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது. மிதக்கும் படகில் பெரிய திரை அமைத்து திறந்த வெளி திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை ஷிகாரா என்னும் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்த வாறும் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறையானது ஸ்மார்ட் சிட்டி ஸ்ரீநகர் மற்றும் மிஷன் யூத் ஜம்மூ காஷ்மீர் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திரையரங்கைத் தொடங்கியுள்ளது. இதனை தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துணை படகுகள் அமைத்து லேசர் ஒளிரூட்டப்பட்டு ஆண்கள், பெண்கள் என ஏராளமான நடன கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். இதனை ஏராளமான மக்கள் ஷிகாரா படகில் அமர்ந்தவாறு கண்டு களித்தனர்.