மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு!

வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் நாடு முழுவதும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு மின்சார உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால் இறக்குமதி பாதிக்கப்பட்டதாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியும் அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லாததும் மேலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதனை சமாளிக்கும் வண்ணம் ஏற்கனவே மூடப்பட்டிருந்த அல்லது உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 20 சுரங்கங்களை முதற்கட்டமாக வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி நடைமுறையில் உள்ள விலையின் அடிப்படையில் சந்தையில் தனியார் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.