’நந்தினியை’ பின்னுக்கு தள்ளுமா ‘அமுல்’: வரும் 19 ஆம் தேதி விவசாயிகள் பேரணி!

’நந்தினியை’ பின்னுக்கு தள்ளுமா ‘அமுல்’: வரும் 19 ஆம் தேதி விவசாயிகள் பேரணி!

கர்நாடகாவில் 'அமுல்' நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 19-ஆம் தேதி பேரணியில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். 

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் பெங்களூருவில் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அம்மாநில விவசாயிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. 

இதையும் படிக்க : எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை - ஜெயகுமார் விமர்சனம்!

அதற்கு காரணம், ஏற்கனவே, கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ’நந்தினி’ என்ற பெயரில் பால், தயிர், மோர் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில் அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் இனி பெங்களூருவில் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருப்பதால், கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், கர்நாடக பால் கூட்டுறவு சங்கம் சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் வினியோக்கப்பட்டு வரும் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை சரியும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடகாவில் 'அமுல்' நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 19-ஆம் தேதி பேரணியில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.