தண்ணி இல்ல....பெண்ணின் தலையில் எச்சில் துப்பி மேக்கப் செய்த அழகு நிபுணர்! 

பெண்ணின் தலை மீது எச்சில்  உமிழ்ந்த சிகையலங்கார நிபுணர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தண்ணி இல்ல....பெண்ணின் தலையில் எச்சில் துப்பி மேக்கப் செய்த அழகு நிபுணர்! 

பெண்ணின் தலை மீது எச்சில்  உமிழ்ந்த சிகையலங்கார நிபுணர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் ஜாவித் ஹபீப்.அவருடைய  கடைக்கு சமீபத்தில் பூஜா குப்தா என்ற பெண் சிகை அலங்காரம் செய்ய சென்றார். அப்போது  பூஜா குப்தாவின் கூந்தலில் தெளிக்க தண்ணீர் இல்லாத காரணத்தினால் தனது வாயிலிருந்து எச்சிலை உமிழ்ந்தார்.இதை கடையில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா உ.பி போலீஸ் டிஜிபிக்கு அனுப்பி விசாரணை நடத்தி  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஜாவித் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து முசாபர்நகர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பூஜா குப்தா தனது அனுபவங்களை விளக்கும் வகையில் மற்றொரு வீடியோவை சமூக இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். அப்போது அவர் பேசியதாவது எனக்கு சிகை அலங்காரம் செய்யும் போது எனது தலையில் எச்சிலை உமிழிந்தார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

ஜாவித் ஹபீப் அதற்கு வருந்தி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போது அவர் பேசும்போது,விளையாட்டுக்காக தான் அவரது  தலையில் எச்சில் துப்பியதாகவும்,  வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.