கர்நாடகா அமைச்சரவையில் இன்று விரிவாக்கம்?

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அமைச்சரவையில் இன்று விரிவாக்கம்?

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

முன்னாள் எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து புதிய முதல்வராக அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர், இளையோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பட்டியலை தயாரிக்க பசவராஜ் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலைக்குள் அந்த பட்டியல் உறுதியாக வாய்ப்புள்ளதாக பசவராஜ் தெரிவித்துள்ளார். இறுதி பட்டியல் வெளியானதும், இன்று மாலைக்குள் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்வர் எனவும், தற்போதைய துணை முதல்வர் அஷ்வத் நாராயன் பற்றி மாறுபட்ட கருத்து இருப்பதால், அவர் மாற்றப்படுவாரா என்பது தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.