பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு... இந்திய -சீனா எல்லையில்  படைகள் விலக்கு...

இந்தியா -சீனா எல்லை பகுதியிலிருந்து இரு நாடுகளும் தங்களது படைகளை முழுவதுமாக விலக்கிக்கொண்டதனால் கோக்ராவில் 15 ஆண்டுகளாக நிலவிய பதற்றம் நீங்கியது.

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு... இந்திய -சீனா எல்லையில்  படைகள் விலக்கு...

இந்திய- சீனா எல்லை பகுதியில் கடந்த ஆண்டு எல்லை பிரச்னை காரணமாக நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதனைத்தொடர்ந்து இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் தங்களது ராணுவத்தை குவித்து வந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

இதைத்தொடர்ந்து போர் மூள்வதை தடுக்க இரு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. அதன் பயனாக கால்வான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை விலக்கியது. 

இதனிடையே மால்டோவில் அண்மையில் நடந்து முடிந்த இரு நாட்டு ராணுவ தளபதிகள் அளவிலான 12ம் கட்ட பேச்சுவார்த்தை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தை முடிவில்  கோக்ரா மற்றும் ஹாட் பிரிங்ஸ் பகுதிகளிலிருந்து படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோக்ரா எல்லையிலிருந்து முழுவதுமாக இரு நாடுகளின் படைகளும் விலக்கப்பட்டுள்ளதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது எல்லையிலிருந்து நிரந்தர முகாம்கள், தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்படுள்ளதாகவும், எல்லை கட்டுப்பாட்டு ஆக்ரமிப்பு தொடர்பாக முடிவுக்கு வராத பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.