சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறையினர் சம்மன்...நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் போராட்டம்!

சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறையினர் சம்மன்...நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் போராட்டம்!

அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 75 காங்கிரஸ் எம்பிக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்று விசாரணை:

நேஷனல் ஹெரால்டு பங்குகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று  நேரில் ஆஜரான சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு  கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நீடித்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.

காங்கிரஸ் தரப்பினர் போராட்டம்:

முன்னதாக சோனியாவை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து  மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர், ப.சிதம்பரம்,  உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதே போல் டெல்லியின் பல இடங்களில்  காங்கிரஸ் சார்பில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசுக்கு முழக்கமிட்டனர். அப்போது தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்கள் அனைவரையும்  போலீசார் விரட்டியடித்தனர். அதே போன்று சென்னையில் சாவுமணி அடித்து காங்கிரஸ் சார்பில் சங்கு ஊதி நூதன முறையில் பேரணி நடத்தப்பட்டது. மேலும் பிரதமர் மோடியின் உருவபடத்துக்கு தீ வைத்து  எரித்து கோஷங்கள் எழுப்பினர்.