தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது!!

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது!!

அமலாக்கத் துறையால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கொச்சியில் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தது. இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற அனுமதியை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாணை நடத்தினர். 

அப்போது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பண மோசடியில் ஈடுபட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எனினும், அசோக்குமார் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் ரொக்கப் பணத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பண மோசடி புகார் தொடர்பாக நேரில் ஆஜர் ஆகுமாறு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்கத் துறை சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதாரர் அசோக் குமாரை கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அவரை விசாரணைக்காக சென்னை அல்லது டெல்லிக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க || https://malaimurasu.com/Vijayakanth-condemns-nanguneri-incident