பிறந்தநாளில் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே வாழ்த்து:  'ஜெகதம்பாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்’

பிறந்தநாளில் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே வாழ்த்து:  'ஜெகதம்பாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்’

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆட்சி மோதல்:

மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் ஷிண்டே அங்கீகரிக்கப்பட்டார்.

நம்பிக்கை துரோகம்:

உத்தவ் அவருடைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரால் அசையகூட முடியாத நிலையில் இருந்தார்.  "நான் எப்போதும் இந்த வேதனையான யதார்த்தத்துடன் வாழ்கிறேன். நான் ஒருவரை நம்பி கட்சியில் அவருக்கு இரண்டாவது அந்தஸ்து கொடுத்தேன். கட்சியைக் கவனித்துக்கொள்ள உங்களை நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையை நீங்கள் உடைத்தீர்கள், அதுவும் நான் மருத்துவமனையில் இருந்தபோது என்று ஷிண்டேவைக் குறிப்பிட்டு உத்தவ் கூறினார்.

சிலர் நான் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.  ஆனால் சிலர் என்னுடைய உடல்நலக்குறைவுக்காக பிரார்த்தனை செய்தனர். இப்போது அவர்கள் சொந்தக் கட்சியினரையே மூழ்கடிக்கிறார்கள்.  என்னால் இனி ஒருபோதும் நிற்க முடியாது என்று வதந்திகள் பரப்புகின்றனர் என்றும் கவலையோடு உத்தவ் கூறினார்.

'என் தந்தையை திருட வேண்டாம்'-உத்தவ் தாக்கரே:

உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் இருந்தபோது கட்சியின் பொறுப்பில் முழுவதுமாக ஷிண்டேவை நம்பினார்.   ஆனால் ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.  தற்போது ஷிண்டே பிரிவினர் உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.  இதைக் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே "இப்போது ஏன் என் தந்தையை திருட வேண்டும்?" கிளர்ச்சிப் பிரிவினரை எச்சரிப்பதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

பாலாசாஹேப் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஷிண்டே பிரிவினரை எச்சரித்த உத்தவ், "தாக்கரே மற்றும் சிவசேனாவை பிரிக்க நான் அவர்களுக்கு தைரியம் தருகிறேன். துரதிர்ஷ்டவசமாக, எனது பெற்றோர் உயிருடன் இல்லை, ஆனால் அவர்கள் தங்கள் சொந்த பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெற்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.  பேச்சு திறமையால் ஓட்டுப் பெறுங்கள், என் தந்தையை ஏன் திருடுகிறீர்கள்? என்று கேள்வியெழுப்பினார். உங்களுக்கு அர்ப்பணிப்பும் இல்லை, கடமை உணர்வும் இல்லை, தைரியம்  கூடவா இல்லை? நீங்கள் ஒரு துரோகி என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக பேசியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து:

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் உத்தவ் தாக்கரேவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக ஜெகதம்பாவை பிரார்த்தனை செய்கிறேன் என்றும் எழுதியுள்ளார். மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு எதிராக ஷிண்டே கிளர்ச்சி செய்ததில் இருந்து ஷிண்டே மற்றும் உத்தவ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.