#BREAKING நாட்டின் 15வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு!!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வாகிறார்.

#BREAKING நாட்டின் 15வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு!!

குடியரசுத்தலைவர் தேர்தல்:

இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும் போட்டியிட்டனர்.

கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி காலை தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்கு தள்ளிய முர்மு:

முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்த  திரவுபதி முர்மு அடுத்தடுத்த சுற்றுகளிலும் அதிக வாக்குகள் பெற்று எதிர்க்கட்சிகிளின் பொது வேட்பாளர்  யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்கு  தள்ளினார்.  இதனால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மகளிர் அணியினர் ஆடி பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திரவுபதி முர்மு வெற்றி:

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக  வாக்குகள் பெற்று  திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற  திரவுபதி முர்மு வரும் 25 ம் தேதி குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.

பழங்குடியினப் பெண் குடியரசுத்தலைவர்:

பழங்குடியினப் பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத்தலைவராக பதவியேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திரௌபதியின் சொந்த  மாநிலமான ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.