வரதட்சணைக் கொடுமை - ஆளுநர் உண்ணாவிரதப் போராட்டம்

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

வரதட்சணைக் கொடுமை - ஆளுநர் உண்ணாவிரதப் போராட்டம்

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா-வின் வழக்கு அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மேலும் கேரளாவில் வரதட்சணை கொடுமை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதற்கும் பெறுவதற்கும் எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திருவனந்தபுரத்தில் உள்ள காந்திபவனில் காந்திய அமைப்புகள் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்க வேண்டும் என அந்த அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அழைப்பை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தார். அதன்படி கேரள ஆளுநர் ஆரிஃ முகமது கான் தனது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை தனது மாளிகையில் இருந்தபடியே மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு முன்பாக தொடங்கியுள்ளார்.