குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - ஃபரூக் அப்துல்லா

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - ஃபரூக் அப்துல்லா

குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 18ம் தேதி குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்த மும்முரம் காட்டி வருகின்றன.

தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஃபரூர் அப்துல்லாவை முன்னிறுத்த  மம்தா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தான் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீருக்கு சேவையாற்றவே தான் விரும்புவதாகவும், தனது பெயரை பரிந்துரைத்த மம்தாவிற்கு நன்றி என்றும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.