சுகா-சாரி கோவில் வளாகத்தில் மற்றொரு கோவிலின் அடிதளம் கண்டெடுப்பு...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புகழ் பெற்ற சுகா-சாரி கோவில் வளாகத்தில் மற்றொரு கோவிலின் அடிதளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுகா-சாரி கோவில் வளாகத்தில் மற்றொரு கோவிலின் அடிதளம் கண்டெடுப்பு...

புவனேஸ்வரில் 15 ஆம் நூற்றாண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்ததாக பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இதற்காகவே புவவேஸ்வர் கோவில்களின் நகரம் என பெயரிடப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக, பாதுகாப்பு இல்லாததால் பெரும்பாலான கோவில்கள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இங்கு தற்போது 200 கோவில்கள் மட்டுமே உள்ளன. இந்தநிலையில்  பண்டைய நூல்களின் குறிப்புகளை ஆதாரமாக கொண்டு இந்திய தொல்லியல் துறையினர் புவனேஸ்வரில் ஆராய்ந்து வருகின்றன.

சுகா-சாரி கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆய்வில் ஏற்கெனவே ஒரு கோவிலின் அடிதளம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு கோவிலின் அடிதளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இன்னும் பல கோயில்களின் கட்டமைப்புகள் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் கூறுகின்றனர்.