தடம்புரண்ட சரக்கு ரயில்...முக்கிய அறிவிப்பு வெளியிட்ட South Western Railway...!

தடம்புரண்ட சரக்கு ரயில்...முக்கிய அறிவிப்பு வெளியிட்ட South Western Railway...!

பெங்களூரு கோட்டத்தின் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 4 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து  உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது, 6  பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால், சேலம் - யஸ்வந்த்பூர், தருமபுரி - பெங்களூரு, பெங்களூரு - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - பெங்களூர் ஆகிய 4 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து South Western Railway தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 4 ர்யில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.