டெல்லி அவசர சட்டம்: வழக்கு 20 -ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

டெல்லி அவசர சட்டம்:   வழக்கு 20 -ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

டெல்லி அவசர சட்டம் எதிரொலியாக, ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனத்தை எதிர்த்த மாநில அரசின் வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் நியமனத்தில் தலையிடும் மத்திய அரசின் அவசர சட்டத்தின் எதிரொலியாக, ஓய்வு பெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் நியமனம் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் ஒன்றாக அமர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கை  20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும்   படிக்க   |  "பில்கிஸ் பானு வழக்கை இனியும் ஒத்திவைக்க முடியாது ; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் " - உச்சநீதிமன்றம்.