குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு: டி.என்.ஏ பரிசோதனையை மட்டுமே ஆதாரமாக காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் டி.என்.ஏ பரிசோதனையை மட்டுமே ஆதரமாக காட்டி குற்றவாளிகள் தப்ப முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  வழக்கு:  டி.என்.ஏ பரிசோதனையை மட்டுமே ஆதாரமாக காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது...

புதுக்கோட்டை மாவட்டம் விசாரலிமலையில் கடந்த 2010ம் ஆண்டு  முருகன் என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த செய்யப்பட்ட நிலையில், அப்போதும்  தீர்ப்பானது உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிக்கு சாதகமாக வந்த டி. என்.ஏ பரிசோதனையை சுட்டிக்காட்டி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் டி. என்.ஏ பரிசோதனையை மட்டுமே ஆதரமாக காட்டி குற்றவாளி தப்ப முடியாது என கூறியதுடன்,சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.