பாதுகாப்பு குறைவு காரணமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்:

தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில், விமான போக்குவரத்து ஆணையரகம் (DCGA) ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு குறைவு காரணமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்:

இந்த செவ்வாய், ஜூலை 5ம் தேதி, இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது முதன்முறையல்ல. பல புகார்கள் ஸ்பைஸ் ஜெட் விமானங்களின் கோளாறுகள் குறித்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

தற்போது, தில்லியில் இருந்து துபாய் செல்லும் SG 11 விமானம் கராச்சியில், எரிபொருள் இண்டிகேட்டர் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் செய்தது. ஆனால், தரையிறக்கம் போது, அவசர நிலை என்பதுக் குறிப்பிடப் படாததாகவும் தெரியவந்துள்ளதால், பதற்றம் நிலவியுள்ளது. மேலும், அந்த விமானத்தில் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட வேண்டிய பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனை அடுத்து, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பாதுகாப்பு விளிம்புகள் சீரழிந்தது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 19ம் தேதி, 185 பயணிகள் கொண்ட தில்லி விமானம், பாட்னாவில் இருந்து புறப்பட்ட தருணத்திலேயே, தீப்பிடித்தது. அதனால், பாட்னாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. அதற்கு காரணமாக, விமானத்தின் விசிரி ப்ளேடுகள் ஒன்றில் பறவை சிக்கி தீப்பிடித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அன்றே, பம்பார்டியர் Q400 Dash 8 என்ற மேலும் ஒரு ஜபல்பூர் விமானம், தில்லியில் இருந்து புறப்படும் முன்னரே, அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், தரையிறக்கம் செய்யப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை, ஜூலை 5, ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் ஒன்று, சீனாவில் உள்ள சோங்கிங்கிற்கு (Chongqing) சென்று கொண்டிருந்தபோது, அதன் வானிலை ரேடார் வேலை செய்யாத நிலையில், விமானம் கொல்கத்தா திரும்பியது.

சமீபத்தில், வெறும் 18-ஏ நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளின் ‘எட்டாவது’ சம்பவம் இதுவாக இருக்க, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் காண்ட்லாவில் இருந்து மும்பை செல்லும் விமானம் அதன் கண்ணாடியின் நடுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் தரையிறங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியிருந்தது. கடந்த ஜூலை 2ம் தேதி, ஜபல்பூருக்கு கிளம்பிய விமானம், புறப்பட்ட சில நேரத்திலேயே, அதன் கேபின் புகையால் சூழப்பட்டு அவசர தரையிறக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், விமான போக்குவரத்து ஆணையரகம் (DCGA) ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.