இந்தியாவில் மீண்டும் வருகிறது கடும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கு?  மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.!!!

உள்ளூர் அளவில் ஊரடங்கு விதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் வருகிறது கடும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கு?  மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.!!!

இந்தியாவில் தற்போது  ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால்,  மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொற்று இரட்டிப்பாகும் வேகம், மாவட்டங்களுக்கு இடையே தொற்று அதிகரிக்கும் விகிதம் ஆகியவற்றை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். வரும் பண்டிகை காலத்தையொட்டி உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒமைக்ரான் பரவும் விகிதத்தை கண்டறிந்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.