பஞ்சாபை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் காங். ஆட்சியில் நெருக்கடி

பஞ்சாபை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பஞ்சாபை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் காங். ஆட்சியில் நெருக்கடி

பஞ்சாபை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ், அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்ற போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை சிங் தியோவுக்கு வழங்க, காங்கிரஸ், தலைமை முடிவு செய்திருந்தது.

பாகேல் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை அமைச்சர் சிங் தியோவுக்கு மாற்றி வழங்கக்கோரி, அவரது ஆதரவு எம். எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் - எம். எல்.ஏ.,க்கள் 20 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ராகுலின் சத்தீஸ்கர் பயணம் குறித்து திட்டமிட வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எம். எல்.ஏ.,க்களின் டெல்லி பயணம், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.