நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவம்... ஜெர்மன் விரைகிறது என்.ஐ.ஏ.,

லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட ஜஸ்விந்தர் சிங் முல்தானியிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ ஜெர்மனி விரைகிறது.

நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவம்... ஜெர்மன் விரைகிறது என்.ஐ.ஏ.,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடித்ததில் இருவர் உயிரிழந்துனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்த ஐஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல்களை நிகழ்த்த ஹர்விந்தர்சிங் சந்து என்ற தேடப்படும் குற்றவாளியுடன் இணைந்து ஜஸ்விந்தர் சிங் முல்தானி திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில் ஜஸ்விந்தர் சிங் முல்தானி-யிடம் விசாரணை நடத்த என். ஐ.ஏ-வுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி என். ஐ.ஏ அதிகாரிகள் ஜெர்மனி செல்கின்றனர்.