தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... மேற்குவங்கத்தில் பதற்றம்...

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது வருகிறது. 

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... மேற்குவங்கத்தில் பதற்றம்...

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது வருகிறது. 

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும்,  மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் முதல்வராக நீடிக்க அவர் 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பபானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக் கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பபானிபூர் தொகுதியில் 53 புள்ளி 32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மற்ற இரண்டு தொகுதிகளிலும் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று முன் தொடங்கி உள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்படுகின்றன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் பிபிலி தொகுதியிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்தொகுதி பிஜூ ஜனதா தள கட்சி எல்எல்ஏ-வாக இருந்த பிரதீப் மகாரதி மறைவை ஒட்டி, அங்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளம் சார்பில் மகாரதியின் மகன் ருத்ரபிரதாப் நிறுத்தப்பட்டுள்ளார்.