இந்தியாவில் கொரோனாவால் 5.23 லட்சம் பேர் உயிரிழப்பு - சிஆர்எஸ் ஆண்டறிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சிஆர்எஸ் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 5.23 லட்சம் பேர் உயிரிழப்பு - சிஆர்எஸ் ஆண்டறிக்கை

இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவுகளை வழங்கும் "சிவில் ரெஜிஸ்ட்ரேசன் சிஸ்டம்", 2020ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 5 லட்சத்து 98 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்திருப்பதும் சிஆர்எஸ். ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020ம் ஆண்டில் இறப்பு விகிதம் 4 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சிஆர்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 994 இறப்புகளும், 2021ம் ஆண்டில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 492 இறப்புகளும் மற்றும் நடப்பு ஆண்டில் 42 ஆயிரத்து 207 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.